Wednesday, May 03, 2006

உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்

படம் : டார்லிங் டார்லிங் டார்லிங்
நடிப்பு: பாக்யரஜ்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் போடும் கோலங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே

தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்
செந்தூர்ம் சிந்தாதோ உன் வண்ண சிவப்பில்
மந்தாரம் பொங்காதோ உன் கன்னக் கதுப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் நீராட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் நீராட்டினாள்
ஓ நெஞ்செ

உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்
உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தால்
அந்நாளே பொன் நாளாய் என் ஜென்மம் விடியும்
பன்னீரில் என்னாளும் என் உள்ளம் நனையும்
கொத்தான முல்லை பித்தான் என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான் என்னை
எப்போதும் முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் போடும் கோலங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே

3 Comments:

Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...

இட்டமைக்கு நன்றி

ஏற்கனவே சேரல் அவர்களும், சந்திரவதனா அவர்களும் இது போல பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார்கள், நீங்களும் இப்பொழுது ஆரம்பித்துள்ளீர்கள் போல வாழ்த்துக்கள்

5:32 AM

 
Blogger Chandravathanaa said...

எனக்கும் பிடித்த பாடல்களில் ஒன்று

11:24 AM

 
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

8:53 AM

 

Post a Comment

<< Home