உந்தன் புன்னகை என்பது சம்மதம் என்று....
படம் : தீபம்
பாடியவர்: ஜேசுதாஸ், ஜானகி
நடிப்பு: விஜயகுமார், சுஜாதா
ஆ:
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே வந்து தொடவா கனியே
உந்தன் புன்னகை என்பது சம்மதம்
என்றுஅழைக்குது எனையே (பூவி)
பெ:
அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஏங்குது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை (பூவி)
ஆ:
இளமாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போனது
நாளை கல்யாணமோ
உனக்கும் எனக்கும் பொருத்தம்தானே (பூவி)
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே வந்து தொடவா கனியே
உந்தன் புன்னகை என்பது சம்மதம்
என்றுஅழைக்குது எனையே

4 Comments:
Yellam sari,
janiki illa padinathu, vani ille
3:50 AM
thanks. maathyiyaachchu.
4:14 AM
நன்றி.
எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்று.
6:45 AM
நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் செய்ய வேண்டும்.
உள்ளெ செற்றிங் பகுதியில் கொமென்ற்ஸ்சைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்.
அங்கே அதற்கான கேள்வி உண்டு. அதை ஆமோதியுங்கள்.
6:55 AM
Post a Comment
<< Home