Friday, April 28, 2006

இதழோடு இதழ் சேரும் காரணம் என்ன...

படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி எம் எஸ் & சுசிலா
நடிப்பு: சிவாஜி- மஞ்சுளா

பெ:
கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா
என் கண்மணி ராஜா காதல் இன்று கை கொடுத்ததல்லவா

ஆ:
கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவாஎன் கண்மணி ராணி ஏய் என்கண்மணி ராணி காதல் இன்று கை கொடுத்ததல்லவா (கல்யாண)

பெ:
இதழோடு இதழ் சேரும் காரணம் என்ன அதை
இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
இதழோடு இதழ் சேரும் காரணம் என்ன
அதைஇனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன

ஆ:
சொல்லித்தோன்றுமோ மன்மதக்கலை
அள்ளிப்பார்க்க வேண்டும் உன்
முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம்
முத்தம் சிந்த வேன்டும் (கல்யாண)

பெ:
இதமான் சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா
இதமான் சுகம் என்ன இன்று மட்டுமா
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து போகுமா

ஆ:
பட்டுப் பூவுடல் சிட்டு மெல்லுடல்
காம தேவன் மேடை உனை
தொட்டுப் பார்க்கவா தொடர்ந்து போகவா
சொல்ல வேண்டும் ஜாடை (கல்யாண)

1 Comments:

Blogger Chandravathanaa said...

இதுவும் நல்ல பாடல்தான்.

11:59 PM

 

Post a Comment

<< Home