Saturday, April 22, 2006

மயக்கமென்ன இந்த மௌனமென்ன...

படம்: வசந்த மாளிகை இசை: கே வி மகாதேவன் பாடல்: கண்ணதாசன்.

ஆண்:மயக்கமென்ன இந்த மௌனமென்னமணி மாளிகைதான் கண்ணேதயக்கமென்ன இந்த சலனெமென்னஅன்பு காணிக்கைதான் கண்னே

பெண்:கற்பணையில் வரும் கதைகளிலே நான்கேடடதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும்காணிக்கை என்று நினைத்ததில்லை கண்ணா

ஆண்:தேர் போலெ ஒரு பொன்னூஞல் அதில் தேவதை போலெ நீயாட
பெண்:பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தில் மீதே கோலமிட
பெண்:கைவளையும் மெய்வளையும் கட்டியணைத்தே கவி பாட (மயக்க)

ஆண்:அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுகிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:உன்னையள்ளால் ஒரு பெண்னையினி நான்உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
பெண்:உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதைஉயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

2 Comments:

Blogger பாரதிய நவீன இளவரசன் said...

சிவாஜி கணேசனின் மகத்தான நடிப்பிற்கு வசந்த மாளிகை ஒரு உதாரணம்.

1989-ல்தான் முதன் முறையாகப் பார்த்தேன். இந்தப் பாடலில், மதுக் கோப்பையை படு கேஷுவலாக ஏந்திய படி, சிவாஜி ஒரு ஸ்டைலாக நடந்து வரும் காட்சியின் போது, தி.நகர் (சென்னை) கிருஷ்ணவேணி திரையரங்கே ஆர்ப்பரித்தது. ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு, சில்லறைக் காசுகளை அள்ளி இரைத்தனர் திரையின் மீது. முதல் வருசையில் வந்திருந்தவர்கள் ஓடி ஓடிப்போய் பொறுக்கிக்கொண்டனர். நிரம்பி வழிந்த அரங்கில், ரசிகர்களின் ஒன்ஸ் மோருக்கு இணங்கி, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இந்தப் பாடலை திரையிட்டபோது...பழைய பாடலின் மவுசு, நகர் வாழ் மக்களிடத்து மங்காமல் பிழைத்திருந்தது புலனானது.

பாடல் வரிகளை இணையத்தில் இட்டமைக்கும், அருமையான நினைவுகளைத் தட்டி எழுப்பியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

9:05 AM

 
Blogger Chandravathanaa said...

இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.
நினைவு படுத்தியதற்கும் பாடலை எனக்கும் பதிவாக்கத் தந்ததற்கும் நன்றி.

4:03 PM

 

Post a Comment

<< Home