Friday, April 28, 2006

காதலின் பொன் வீதியில்......

படம்: பூக்காரி
நடிப்பு: மு க முத்து


பெ:காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்கண்ணோடு ஒருத்தி வந்தாள் இந்தக்கண்ணோடு ஒருத்தி வந்தாள்

ஆ:காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்பண்ணோடு ஒருத்தி வந்தாள்இந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள் (காதலின்)

பெ:திருப்பாற்கடலின் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக் அங்கு
பகலுமில்லை ஒரு இரவுமில்லை
நாம் வாழ்ந்த்ருப்போம் இனிதாக்

ஆ:இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போலே
என் மனதிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
( காதலின்)

ஆ:
விழியோரங்களில் சில் நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்

பெ:
அந்தக் கவிதையிலே உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்

ஆ:
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு
அதை ரசிப்பதுதான் பேரின்பம்

பெ:
இனப வாசலிலே ஒரு காவலில்லை
இனிகாலமெல்லாம் நம் சொந்தம்

காதலின் பொன் வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
இந்தப் பண்ணோடு ஒருத்தி வந்தாள் (காதலின்)

2 Comments:

Blogger Chandravathanaa said...

மிகவும் இனிமையான பாடல்.
பலமுறை ரசித்துக் கேட்டிருக்கிறேன்.

11:58 PM

 
Blogger Unknown said...

காதலின் பொன் வீதியில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

சு.ராஜகோபால்
அல்கோர்
கத்தார்

1:41 PM

 

Post a Comment

<< Home